சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியருக்கு 5 ஆண்டு ஜெயில் தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் சண்முகபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் முத்துப்பாண்டி (வயது 52). இவர் தனியார் பள்ளிக்கூடத்தில் கைத்தொழில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு, 11, 12, 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமார் முத்துபாண்டியை கைது செய்தனர்.
5 ஆண்டு ஜெயில்
இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குமார் சரவணன், குற்றம் சாட்டப்பட்ட ராஜ்குமார் முத்துபாண்டிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story