சிறுமி பாலியல் பலாத்காரம்; இன்ஸ்பெக்டர் கைது பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்


சிறுமி பாலியல் பலாத்காரம்; இன்ஸ்பெக்டர் கைது பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்
x
தினத்தந்தி 24 Nov 2020 4:29 AM IST (Updated: 24 Nov 2020 4:29 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டதுடன், பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.

பெரம்பூர், 

சென்னையில் 15 வயது சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக வியாசர்பாடியைச் சேர்ந்த சகிதா பானு (வயது 22), மதன்குமார் (35), அவரது தாய் செல்வி (50), தங்கை சத்யா (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் இதுபோல் பல சிறுமிகளை மிரட்டி துன்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரிந்தது.

இந்த வழக்கில் கார்த்திக் (25), மகேஸ்வரி (29), வனிதா (35), ஈஸ்வரி (19), விஜயா (45), திலீப் (25) உள்ளிட்ட விபசார தரகர்கள் 10 பேரை அனைத்து மகளிர் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இன்ஸ்பெக்டர் கைது

இந்த வழக்கில் கைதான சத்யா கொடுத்த தகவலின் பேரில் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தரகர் ராஜேந்திரன் (44) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர், சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தியதும், பல்வேறு உயர் அதிகாரிகளுக்கும் அவர்களை அனுப்பி வைத்ததும், இதேபோல் எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்திக்கும் அந்த 15 வயது சிறுமியை பாலியலுக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இன்ஸ்பெக்டர் புகழேந்தி கைது செய்யப்பட்டார். மேலும் அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவிட்டார். விபசார தரகர் ராஜேந்திரனையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story