சென்னையில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் நேரடியாக களம் இறங்கிய போலீஸ் கமிஷனர்


சென்னையில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் நேரடியாக களம் இறங்கிய போலீஸ் கமிஷனர்
x
தினத்தந்தி 25 Nov 2020 5:03 AM IST (Updated: 25 Nov 2020 5:03 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று நேரடியாககளத்தில் இறங்கி நடவடிக்கையில் ஈடுபட்டார்.

சென்னை, 

நிவர் புயல் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் குளம் போல தேங்கி கிடக்கிறது. நேற்று போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மழை நீர் தேங்கிய பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார். மழை நீர் தேங்கிய இடங்களில் நடந்து சென்று மழை நீரை அகற்ற மாநகராட்சி ஊழியர்களுடன் களத்தில் இறங்கி நடவடிக்கையில் ஈடுபட்டார்.

எழும்பூர் பகுதியில் சாலையில் மழை நீரில் நடந்து சென்று ஆய்வு செய்தார். கமிஷனர் உத்தரவின் பேரில் போலீசாரும், மாநகராட்சி ஊழியர்களும் இணைந்து தேங்கி கிடந்த மழை நீரை அகற்றினார்கள்.

போக்குவரத்து நெரிசல்

மழை நீர் தேங்கி கிடந்ததால், சாலைகளில் வாகனங்கள் வேகமாக செல்ல முடியவில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழை நீர் அகற்றப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சீராக சென்றது.

கூடுதல் கமிஷனர்கள் தினகரன், அருண், கண்ணன், இணை கமிஷனர்கள் பாலகிருஷ்ணன், சுதாகர், ஏ.ஜி.பாபு, மகேஸ்வரி, லட்சுமி, பாண்டியன் ஆகியோரும் மழை நீர் தேங்கிய பகுதிகளுக்கு சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

Next Story