மேட்டூரில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேட்டூர்,
காவிரி-சரபங்கா நீரேற்று திட்டத்தை விளைநிலங்களை பாதிக்காத வகையில் செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நிலம் எடுப்பின் போது விவசாயிகள் மிரட்டப்படுவதாக கூறி அதை கண்டித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க மாநில துணைத்தலைவர் டெல்லி பாபு தலைமை தாங்கினார்.
இதில், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, துணைத்தலைவர்கள் தங்கவேலு, மணிமுத்து, துணை செயலாளர் அரியாக்கவுண்டர், மேட்டூர், கொளத்தூர் ஒன்றிய செயலாளர் வேணுகோபால் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story