மாவட்ட செய்திகள்

பாலத்தில் இருந்து தவறி விழுந்த டிரைவர் சாவு + "||" + From the bridge Failed Driver death

பாலத்தில் இருந்து தவறி விழுந்த டிரைவர் சாவு

பாலத்தில் இருந்து தவறி விழுந்த டிரைவர் சாவு
காஞ்சீபுரம், பாலத்தில் இருந்து தவறி விழுந்ததில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் காமராஜர் தெரு பகுதியை சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது 34), ஆட்டோ டிரைவர். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சரண்ராஜ், காமராஜர் தெரு பகுதி அருகே ஆட்டோவை நிறுத்தி விட்டு, அங்குள்ள ஒரு பாலத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேல், செல்லத்துரை மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.