குடிசை வீடுகளில் வசிப்போர் பாதுகாப்பு மையங்களுக்கு செல்லுங்கள் ககன்தீப்சிங்பேடி வேண்டுகோள்


குடிசை வீடுகளில் வசிப்போர் பாதுகாப்பு மையங்களுக்கு செல்லுங்கள் ககன்தீப்சிங்பேடி வேண்டுகோள்
x
தினத்தந்தி 26 Nov 2020 5:23 PM IST (Updated: 26 Nov 2020 5:23 PM IST)
t-max-icont-min-icon

குடிசை வீடுகளில் வசிப்போர் பாதுகாப்பு மையங்களுக்கு செல்ல வேண்டும் என்று ககன்தீப்சிங்பேடி கூறினார்.

கடலூர், 


நிவர் புயலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் தேவனாம்பட்டினம் பல்நோக்கு மையத்தில் தங்கியுள்ள மக்களை பார்வையிட்டு, அறிவுரை வழங்கிய மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப்சிங்பேடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மின் ஊழியர்கள் வருகை

வெளி மாவட்டத்தில் இருந்து மின்வாரிய ஊழியர்கள் வருகை தந்துள்ளனர். மொத்தம் 1,000 பேர் வர இருப்பதாக இருந்தது. ஆனால் தற்போது 600 பேர் வருகை தந்துள்ளனர். போதிய உபகரணங்களையும் கொண்டு வந்துள்ளனர். இது தவிர 10 கிரேன், 10 பொக்லைன் எந்திரம் அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. திருச்சி மாநகராட்சியில் இருந்து 50 தூய்மை பணியாளர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

49 மீனவ கிராம மக்களும் வீட்டுக்குள் இருக்க வேண்டாம்.

அருகில் உள்ள சமுதாய நலக்கூடங்களுக்கு வர வேண்டும். உள் கிராமங்களில் குடிசை வீடுகளில் இருப்பவர்களும் வெளியே வந்து, புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வேண்டும். அவர்களுக்கு கிராமங்கள் தோறும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. அங்கு சமையல் செய்து உணவு வழங்கப்படும்.

இவ்வாறு ககன்தீப்சிங்பேடி கூறினார்.

ரேஷன் கார்டு

முன்னதாக தேவனாம்பட்டினத்தில் உள்ள பல்நோக்கு மையத்தில் தங்கி உள்ள மக்களிடம், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட அத்தியாவசிய அட்டைகளை மழையில் நனையாத வகையில் பாலிதீன் பைகளில் போட்டு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். 

Next Story