அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கரூர் தாலுகா அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட மத்திய, மாநில அரசு பொதுத்துறை அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர்,
கரூர் தாலுகா அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட மத்திய, மாநில அரசு பொதுத்துறை அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் பொன்.ஜெயராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தேசிய கல்விக்கொள்கையை கைவிட வேண்டும். அகவிலைப்படி, சரண்டர், டி.பி.எப் வட்டி குறைப்பு உள்ளிட்ட கொரோனா தொற்று காலத்தில் பறிக்கப்பட்ட உரிமைகளை உடனே வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், எம்.ஆர்.பி.செவிலியர்கள் உள்ளிட்டவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். ஆயுள்காப்பீடு, வங்கி, தொலைத்தொடர்பு, ரெயில்வேதுறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுவதை கைவிட வேண்டும், தொழிலாளர்களின் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
Related Tags :
Next Story