பென்னாகரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி பொதுக்குழு கூட்டம்


பென்னாகரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி பொதுக்குழு கூட்டம்
x
தினத்தந்தி 27 Nov 2020 6:39 PM IST (Updated: 27 Nov 2020 6:39 PM IST)
t-max-icont-min-icon

பென்னாகரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி பொதுக்குழு கூட்டம் வேல்முருகன் பங்கேற்பு.

பென்னாகரம், 

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தர்மபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் பென்னாகரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் முனிரத்தினம் வரவேற்று பேசினார். மாநில துணை பொதுச்செயலாளர் தவமணி, மாநில மகளிரணி செயலாளர் ஜெயலட்சுமி பாலு, தலைமை நிலைய செயலாளர் கனல்கண்ணன், ஊடகப்பிரிவு செயலாளர் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் மாநில சட்ட பாதுகாப்பு செயலாளர் காந்திகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் மாதேஸ்வரன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சரவணன், இளம்புயல் பாசறை மாவட்ட செயலாளர் வசந்தராஜ், மாவட்ட தலைவர் மாது, மாவட்ட பொருளாளர் கந்தசாமி, இளம்புயல் பாசறை மாவட்ட தலைவர் ரவீந்திரன், மாவட்ட சட்ட பாதுகாப்பு செயலாளர் முரளி, தர்மபுரி நகர செயலாளர் சீனிவாசன், ஒன்றிய தலைவர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் சுரேஷ்குமார், சண்முகம், பூபால், தினேஷ், நவீன், துரை, மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக வேல்முருகன் நிருபர்களிடம் கூறுகையில், தர்மபுரி எம்.ஜி.ஆர். நகரில் 50 ஆண்டு காலத்திற்கு மேலாக வாழும் 2000 குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். ஒகேனக்கல் உபரி நீரை ஏரிகளில் நிரப்ப வேண்டும். நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கும் வகையில் பாதிப்புகளை முறையாக கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்று அவர் கூறினார்.

Next Story