காங்கிரஸ் அரசின் செயல்பாடு மிகமிக மோசம்: தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணிக்கே வெற்றி ரங்கசாமி நம்பிக்கை


காங்கிரஸ் அரசின் செயல்பாடு மிகமிக மோசம்: தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணிக்கே வெற்றி ரங்கசாமி நம்பிக்கை
x
தினத்தந்தி 28 Nov 2020 4:41 AM IST (Updated: 28 Nov 2020 4:41 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசின் செயல்பாடு மிகமிக மோசமாக உள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி, 

புதுவை சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி தொடரும். முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான ஆளும் காங்கிரஸ் அரசு மக்களுக்கு புதிதாக எந்த நலத்திட்டங்களையும் கொண்டு வரவில்லை. முதல்-அமைச்சர் நாராயணசாமி மக்களுக்கான தனது பணியை சரியாக செய்ய வில்லை. பிறர் மீது பழிபோட்டு தப்பித்துக் கொள்கிறார். புதுவை அரசு மக்கள் நலன், மாநில வளர்ச்சியின் மீது அக்கறை கொண்டு பணிகளை சரியாக செய்ய வேண்டும். மிகமிக மோசமான ஆட்சி நடப்பதாக மக்கள் சொல்கிறார்கள்.

இந்த ஆட்சியில் புதிய திட்டங்கள் என்ன கொண்டு வரப்பட்டுள்ளது? எந்த திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்படவில்லை. இந்த ஆட்சியில் மக்களுக்கு என்ன பலன் கிடைத்துள்ளது? புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அரசின் செயல்பாடு சிறப்பாக இருந்தது.

இந்த அரசின் செயல்பாட்டை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். எனவே வரும் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story