அரவக்குறிச்சி பகுதியில் பலத்த மழை: முருங்கை விற்பனை பாதிப்பு


அரவக்குறிச்சி பகுதியில் பலத்த மழை: முருங்கை விற்பனை பாதிப்பு
x
தினத்தந்தி 29 Nov 2020 1:09 AM GMT (Updated: 29 Nov 2020 1:09 AM GMT)

அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பெரும்பாலும் அதிக அளவு முருங்கை பயிரிட்டு இருந்தனர்.

அரவக்குறிச்சி,

அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பெரும்பாலும் அதிக அளவு முருங்கை பயிரிட்டு இருந்தனர். தற்போது முருங்கை சீசன் காலம் என்பதால் முருங்கை மரங்கள் நன்கு வளர்ந்து காய் காய்த்து இருந்தது. அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஆங்காங்கே முருங்கை கமிஷன் மண்டி அமைத்து வியாபாரிகள், விவசாயிகளிடமிருந்து நேரடியாக முருங்கைக்காய்களை வாங்கி தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர். அப்போது ஒரு கிலோ முருங்கை ரூ.40-க்கு விற்றது. கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் முருங்கை காய்கள் சற்று பழுப்பு நிறத்தில் மாறியது. இதில் ஒரு கிலோ ரூ.15 முதல் 20 வரை மட்டுமே விலை போகிறது. இதனால் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Next Story