மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு


மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 29 Nov 2020 11:27 AM IST (Updated: 29 Nov 2020 11:27 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 700 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர்,

மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் முதல் கால்வாய் பாசன பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்ததால் பாசனத்திற்கான தண்ணீர் தேவை மிகவும் குறைந்தது.

இதனை கருத்தில் கொண்டு கடந்த 24-ந் தேதி முதல் கால்வாய் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 400 கனஅடியாக குறைக்கப்பட்டது. அதே நேரத்தில் நிவர் புயல் எதிரொலியாக, மழை மேலும் தீவிரம் அடைந்ததால் 26-ந் தேதி இந்த தண்ணீர் திறப்பு வினாடிக்கு 250 கனஅடியாக குறைக்கப்பட்டது.

அதிகரிப்பு

தற்போது பாசன பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததால் பாசனத்திற்கான தண்ணீர் தேவை மீண்டும் அதிகரித்தது. இதனை கருத்தில் கொண்டு நேற்று காலை முதல் கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 250 கனஅடியில் இருந்து வினாடிக்கு 700 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரத்து 13 கனஅடியாகவும், அணை நீர்மட்டம் 100.18 அடியாகவும் இருந்தது.

Next Story