மாவட்ட செய்திகள்

சேலத்தில் லாரி-கார் பழுது பார்க்கும் 3 பட்டறைகளில் பயங்கர தீ + "||" + Terrible fire at 3 lorry-car repair workshops in Salem

சேலத்தில் லாரி-கார் பழுது பார்க்கும் 3 பட்டறைகளில் பயங்கர தீ

சேலத்தில் லாரி-கார் பழுது பார்க்கும் 3 பட்டறைகளில் பயங்கர தீ
சேலத்தில் லாரி-கார் பழுது பார்க்கும் 3 பட்டறைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
கொண்டலாம்பட்டி,

சேலம் களரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 59). இவர் சேலம் சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலையில் கார்-பஸ்கள் பழுதுபார்க்கும் 2 பட்டறைகள் வைத்து நடத்தி வருகிறார்.

இதே பகுதியில் சேலம் அருகே உள்ள காட்டூரை சேர்ந்த மணிகண்டன் (40) என்பவர் லாரி பழுது பார்க்கும் பட்டறை மற்றும் டயருக்கு பஞ்சர் ஒட்டும் கடை வைத்து நடத்தி வருகிறார். இருவரும் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் வேலை முடிந்து பட்டறையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றனர்.


போராடி தீயை அணைத்தனர்

இந்த நிலையில் நேற்று காலை 5 மணி அளவில் 3 பட்டறைகளும் திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பட்டறை முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இது குறித்து அங்கிருந்த காவலாளி சின்னுசாமி பட்டறை உரிமையாளர்களுக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து 2 பேரும் சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் செவ்வாய்பேட்டை மற்றும் சூரமங்கலம் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீர் மற்றும் ரசாயன பொடியை பீய்ச்சி அடித்து ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர்.

பட்டறைகள் எரிந்து நாசம்

இருப்பினும் இந்த தீ விபத்தில் மணிகண்டன் பட்டறையில் பழுது பார்க்க நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்கள், அங்கிருந்த தளவாட பொருட்கள் மற்றும் பட்டறை முழுவதும் எரிந்து நாசமாகின. அதேபோன்று கந்தசாமியின் பட்டறையில் இருந்த பழுது பார்க்கும் கருவிகள் பீரோ உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மற்றும் பட்டறை முழுவதும் எரிந்தன.

இந்த தீ விபத்தில் பஸ், லாரி, கார் பழுது பார்க்கும் 3 பட்டறைகள் முழுவதும் எரிந்து நாசமாகின. இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியதாக கூறப்படுகிறது. இது குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள். இந்த பயங்கர தீ விபத்து சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் நடுவானில் விமானத்தில் தீ; என்ஜின் பாகங்கள் உடைந்து விழுந்ததால் பரபரப்பு
அமெரிக்காவில் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் விமானத்தின் என்ஜினில் தீ பற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் விமானியின் சாதுரியத்தால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.
2. கெலமங்கலம்: வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது
கெலமங்கலம் அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது.
3. கழிவுநீர் ஏற்றி வந்த டேங்கர் லாரியில் திடீர் தீ பொதுமக்கள் போராடி அணைத்தனர்
தக்கலை அருகே கழிவுநீர் ஏற்றி வந்த டேங்கர் லாரியில் திடீரென தீ பிடித்து எாிந்தது. தீயை பொதுமக்கள் போராடி அணைத்தனர்.
4. 3-வது நாளாக நீடித்த தீயணைப்பு பணி வணிக வளாக தீ விபத்தில் 700 கடைகள் எரிந்து நாசம்
மும்பை வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நேற்று 3-வது நாளாக தீயணைப்பு பணி நீடித்தது. இதில் 700 கடைகள் எரிந்து நாசம் அடைந்தது. மேலும் ரூ.150 கோடி பொருட்கள் சேதம் அடைந்தது.
5. நந்தூர்பரில் பயங்கர விபத்து 30 அடி பள்ளத்தில் பஸ் பாய்ந்து 5 பயணிகள் பலி 34 பேர் காயம்
நந்தூர்பரில் 30 அடி பள்ளத்தில் பஸ் பாய்ந்து 5 பயணிகள் பலியாகினர். மேலும் 34 பேர் காயமடைந்தனர்.