அந்தியூர் அருகே கிணற்றில் குதித்து புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
அந்தியூர்,
கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலைப்பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 23). ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் தேவர்மலை பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி (20). இவர்கள் 2 பேருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இதைத்தொடர்ந்து சரஸ்வதி கணவருடன் அந்தியூர் அருகே குப்பாண்டபாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். மேலும் கணவருடன் ஒரே மில்லில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சரஸ்வதி மாதேசிடம், ‘கடன் அதிகமாக உள்ளது. எனவே நாம் 2 பேரும் சொந்த ஊருக்கு சென்று விடலாம் என்று அடிக்கடி கூறி வந்துள்ளார்.
மாயமான...
சம்பவத்தன்று காலை சரஸ்வதி மாதேஷிடம் அருகே உள்ள வீட்டுக்கு சென்றுவருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அவர் வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சரஸ்வதியை மாதேஷ் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். அவர் கிடைக்கவில்லை. இது குறித்து மாதேஷ் நேற்று முன்தினம் ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் தனது மனைவி சரஸ்வதியை காணவில்லை என்று புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரஸ்வதியை தேடி வந்தனர். இந்த நிலையில் குப்பாண்டபாளையம் அருகே உள்ள ஒரு கிணற்றில் ஒரு பெண்ணின் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
கிணற்றில் குதித்து தற்கொலை
இதற்கிடையே தகவல் கிடைத்து அந்தியூர் தீயணைப்பு வீரர்களும் அங்கு சென்றனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி கயிறு கட்டி பிணத்தை மேலே கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் குப்பாண்டபாளையத்தை சேர்ந்த காணாமல் போன மாதேசின் மனைவி சரஸ்வதி என்பதும், அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பதும் தெரியவந்தது.
ஆர்.டி.ஓ. விசாரணை
உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் சரஸ்வதிக்கு திருமணம் நடந்து 3 மாதங்களே ஆவதால் கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
கிணற்றில் குதித்து புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடன் தொல்லையால் ஏற்கனவே தற்கொலை முயற்சியில் தனது மனைவி, பிள்ளைகளை இழந்த பிளம்பர், 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரது 75 வயதான தந்தை அனாதையாக தவித்து வருகிறார்.
சென்னை எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடத்தில் இருந்து முதியவர் ஒருவர் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் நடந்து ஒரு மணி நேரம் தாண்டியும் பிணத்தை மீட்க போலீசார் வராததால் பயணிகள் ஆதங்கம் தெரிவித்தனர்.