10 நாட்களுக்கு பிறகு கொரோனாவுக்கு மூதாட்டி பலி


10 நாட்களுக்கு பிறகு கொரோனாவுக்கு மூதாட்டி பலி
x
தினத்தந்தி 1 Dec 2020 6:06 AM IST (Updated: 1 Dec 2020 6:06 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் 10 நாட்களுக்கு பிறகு மாகியை சேர்ந்த மூதாட்டி கொரோனாவுக்கு பலியானார்.

புதுச்சேரி, 

புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 76 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 33 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 52 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

புதுவை மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக பலி ஏற்படாத நிலையில் மாகி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 72 வயது மூதாட்டி கொரோனாவுக்கு பலியானார். இதைத்தொடர்ந்து கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 610 ஆக உயர்ந்துள்ளது.

புதுவை மாநிலத்தில் இதுவரை 4 லட்சத்து 3 ஆயிரத்து 249 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 3 லட்சத்து 61 ஆயிரத்து 956 பேருக்கு கொரோனா இல்லை என்பது கண்டறியப்பட்டது. 36 ஆயிரத்து 968 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

அவர்களில் ஆஸ்பத்திரியில் 171 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 289 பேரும் என 460 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 35 ஆயிரத்து 898 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

புதுச்சேரியில் 499 பேரும், காரைக்காலில் 59 பேரும், ஏனாமில் 44 பேரும், மாகியில் 8 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர். புதுவையில் உயிரிழப்பு 1.65 சதவீதமாகவும், குணமடைவது 97.11 சதவீதமாகவும் உள்ளது.

Next Story