குடியுரிமை எழுச்சி மாநாடு விளக்க தெருமுனை கூட்டத்தில் பங்கேற்க குவிந்த இஸ்லாமியர்கள்
குடியுரிமை எழுச்சி மாநாடு விளக்க தெருமுனை கூட்டத்தில் பங்கேற்க இஸ்லாமியர்கள் குவிந்தனர். போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு நிலவியது.
தஞ்சாவூர்,
ஷாகின் பாக் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை எழுச்சி மாநாடு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளதையொட்டி தஞ்சை கீழவாசல் ஆடக்கார தெருவில் தெருமுனை விளக்கக்கூட்டம் நேற்றுமாலை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் கூட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசலில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டம் முடிந்தவுடன் தெருமுனை விளக்கக்கூட்டம் நடத்துவதற்காக 30 பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சமூக ஆர்வலர் முகமதுஇக்பால் தலைமையில் திரண்டு வந்தனர்.
கலைந்து சென்றனர்
துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிராஜன் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். தெருமுனை கூட்டம் நடத்தினால் கைது செய்வோம் எனவும், 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் கலைந்து செல்ல வேண்டும் எனவும் போலீசார் தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து சட்டத்தை மதித்து அனைவரும் கலைந்து செல்லும்படியும், குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தினால் அரசு அலுவலகங்களில் குடியேறி பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் எனவும் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story