கடலில் காணாமல் போன மீனவர் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண உதவி


கடலில் காணாமல் போன மீனவர் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண உதவி
x
தினத்தந்தி 1 Dec 2020 9:24 AM IST (Updated: 1 Dec 2020 9:24 AM IST)
t-max-icont-min-icon

கடலில் காணாமல் போன மீனவர் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண உதவியை, ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.

கருங்கல்,

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தூத்தூர் பஞ்சாயத்து ஆகத்தம்மாள் தெருவை சேர்ந்த தொபியாஸ் என்பவரது மகன் மோயிஸ் (வயது 48). இவர், ரதி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந்தேதி ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள், தூத்தூர் கடற்கரையில் இருந்து 600 நாட்டிக்கல் மைல் தொலைவில் ஆழ்கடலில் மீன்பிடித்த போது பலத்த காற்று வீசியுள்ளது.

பின்னர் விசைப்படகை கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி விட்டு இரவு அனைவரும் விசைப்படகில் தூங்கி உள்ளனர். காலையில் எழுந்து பார்த்த போது மோயிசை காணவில்லை. விசைப்படகில் இருந்தவர்களும், அருகில் மற்ற விசைப்படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்தவர்களும் இணைந்து கடலில் இவரை தேடி இருக்கிறார்கள். தேடிய பிறகும் இதுவரையும் மோயிஸ் கிடைக்கவில்லை.

ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.

இவரின் வருமானத்தை நம்பி இருந்த இவரது மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் எவ்வித வருமானமும் இல்லாமல் வாழ்க்கை நடத்த அவதிப்பட்டு வந்தனர். இதனை அறிந்த கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், மோயிஸ் மனைவி மேரிகுட்டியிடம் தனது சொந்த நிதி ரூ.50 ஆயிரத்தை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது மாவட்ட நிர்வாகிகள் பால்ராஜ், ஜார்ஜ் ராபின்சன், ராஜூ, தூத்தூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் சூசை பிரடி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story