வேதாரண்யம் பகுதியில் கஞ்சா விற்பனை குறித்து தகவல் தெரிவித்தால் சன்மானம் - போலீசார் அறிவிப்பு
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக வேதாரண்யம் பகுதியில் கஞ்சா விற்பனை குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.
‘தினத்தந்தி’யில் செய்தி
வேதாரண்யம் பகுதியில் தொடர்ந்து கஞ்சா கடத்துவது தொடர்பாகவும் இந்த கடத்தலில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகள் கைது செய்யாமல் இருப்பது குறித்தும் ‘தினத்தந்தி’யில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக வேதாரண்யம் காவல் சரகம் பகுதியில் ஆங்காங்கே போலீசார் ஒரு அறிவிப்பு பதாகைகளை வைத்துள்ளனர்.
அந்த பதாகையில் போலீசார் தெரிவித்துள்ளதாவது:-
தகவல் தெரிவித்தால் சன்மானம்
வேதாரண்யம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்தல், பதுக்கி வைத்திருத்தல் மற்றும் இலங்கைக்கு கடத்துதல் போன்ற செயல்பாடுகளில் யாரேனும் ஈடுபட்டால் அது குறித்து உடனடியாக போலீசாரிடம் தகவல் அளிக்க கேட்டுக் கொள்கிறோம். இது தொடர்பாக தகவல் அளிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். மேலும் தகவல் தெரிவிப்பவர்களின் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் வேதாரண்யம் போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் செல்போன் எண்கள் மற்றும் போலீஸ் நிலைய தொலைபேசி எண்களையும் அதில் குறிப்பிட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story