பெரம்பலூரில் ஊரக வளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் மரியதாஸ் தலைமையில் பெரம்பலூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெரம்பலூர்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரை தாக்க முற்பட்ட பாரதீய ஜனதா கட்சி பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் மரியதாஸ் தலைமையில் பெரம்பலூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையிலும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வட்ட கிளை தலைவர் சரவணன் தலைமையிலும், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வட்ட கிளை செயலாளர் சித்தார்த்தன் தலைமையிலும் ஊரக வளர்ச்சித் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story