வேளாண் விரோத சட்டத்தை திரும்பப் பெறக்கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


வேளாண் விரோத சட்டத்தை திரும்பப் பெறக்கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நேற்றுகாலை திருப்பூர் குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர்,

மத்திய அரசின் 3 வேளாண் விரோத சட்டங்களையும், மின்சார சட்டத் திருத்த மசோதாவை உடனடியாக திரும்பப் பெறக் கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட வன்முறையை கண்டித்தும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நேற்றுகாலை திருப்பூர் குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பொதுச் செயலாளர் முத்து விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வக்கீல் ஈசன் சிறப்புரையாற்றினார். பொருளாளர் ரமேஷ் சிவகுமார், ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், துணைத்தலைவர் தென்னவன் அரசேந்திரன், அமைப்பு செயலாளர் பழ. ரகுபதி, கொள்கை பரப்பு செயலாளர் சிவகுமார், தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் மோகனராசு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். தமிழ் பேரரசு கட்சியின் மாநில பொதுச் செயலாளர் டைரக்டர் கவுதமன் செல்போன் மூலமாக ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story