விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் - சாத்தூரில் நடந்தது


விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் - சாத்தூரில் நடந்தது
x
தினத்தந்தி 2 Dec 2020 3:30 PM IST (Updated: 2 Dec 2020 3:15 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சாத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாத்தூர்,

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கட்சியினர், விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சாத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் விவசாய சங்கங்கள் இணைந்து சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் இருந்து தபால் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர்.

பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு மத்திய அரசை கண்டித்தும், திருத்தப்பட்ட வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டவர்களை சாத்தூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.
1 More update

Next Story