தென்மாவட்ட பயணிகளின் வசதிக்காக கோவை, ராமேசுவரம், குருவாயூருக்கு சிறப்பு ரெயில்கள்
தென்மாவட்ட பயணிகளின் வசதிக்காக குருவாயூர், கோவை, ராமேசுவரம் ஆகிய பகுதிகளுக்கு தினசரி சிறப்பு ரெயில்கள் வருகிற 8-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.
மதுரை,
தென்னக ரெயில்வேயில் தென்மாவட்ட பயணிகளின் வசதிக்காக கூடுதல் ரெயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே, சில தென்மாவட்ட ரெயில்களின் பட்டியல் ரெயில்வே வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து, கோவை-நாகர்கோவில், குருவாயூர் எக்ஸ்பிரஸ், ராமேசுவரம் எக்ஸ்பிரஸ், பாலக்காடு எக்ஸ்பிரஸ், அனுராத் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களை இயக்க ஒப்புதல் கிடைத்துள்ளது.
அதன்படி, கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு வருகிற 8-ந் தேதி முதல் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில்(வ.எண்.02668) கோவையில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.25 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் அதிகாலை 5 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையம் சென்றடையும். மறுமார்க்கத்தில் வருகிற 9-ந் தேதி முதல் நாகர்கோவிலில் இருந்து (வ.எண்.02667) இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1.45 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 7.15 மணிக்கு கோவை சென்றடைகிறது.
இந்த ரெயில்கள் திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், வாஞ்சி மணியாச்சி, நெல்லை, வள்ளியூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னையில் இருந்து குருவாயூருக்கு வருகிற 8-ந் தேதி முதல் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில்(வ.எண்.06127) சென்னையில் இருந்து காலை 8.25 மணிக்கு புறப்பட்டு மாலை 4.10 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 6.40 மணிக்கு குருவாயூர் ரெயில் நிலையம் சென்றடையும். மறுமார்க்கத்தில் குருவாயூரில் இருந்து சென்னைக்கு 9-ந் தேதி முதல் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில்(வ.எண்.06128) குருவாயூரில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.05 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. இரவு 8.35 மணிக்கு சென்னை சென்றடைகிறது.
இந்த ரெயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, நெல்லை, நாங்குநேரி, வள்ளியூர், நாகர்கோவில், இரணியல், குழித்துறை, நெய்யாற்றின்கரை, திருவனந்தபுரம், கொல்லம், காயன்குளம், ஆலப்புழா, எர்ணாகுளம் ஜங்சன், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, அங்கமாலி, சாலக்குடி, இரிஞ்சலகுடா, திருச்சூர், பூங்குன்னம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் குருவாயூரில் இருந்து சென்னை செல்லும் ரெயில் கூடல்நகர், வர்கலா, சிரயங்கீழ் ஆகிய ரெயில் நிலையங்களிலும், சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் ரெயில் மாம்பலம் ரெயில் நிலையத்திலும் நின்று செல்லும்.
சென்னையில் இருந்து ராமேசுவரத்துக்கு 8-ந் தேதி முதலும், ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு 9-ந் தேதி முதல் ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதில் சென்னையில் இருந்து ராமேசுவரம் செல்லும் ரெயில்(வ.எண்.06851) இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும். மறுமார்க்கத்தில் ராமேசுவரத்தில் இருந்து மாலை 5.10 மணிக்கு புறப்படும் ரெயில்(வ.எண்.06852) மறுநாள் காலை 6.45 மணிக்கு சென்னை சென்று சேரும்.
இந்த ரெயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், பாம்பன் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் சென்னையில் இருந்து இயக்கப்படும் ரெயில் கடலூர் துறைமுகம் மற்றும் சீர்காழி ஆகிய ரெயில் நிலையங்களிலும், ராமேசுவரத்தில் இருந்து இயக்கப்படும் ரெயில் மாம்பலம் ரெயில் நிலையத்திலும் நின்று செல்லும்.
மதுரையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பிகானீருக்கு வியாழக்கிழமைகளில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளை கொண்ட அனுராத் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. மதுரையில் இருந்து இன்று(புதன்கிழமை) 10-ந் தேதி, 17-ந் தேதி, 24-ந் தேதி, 31-ந் தேதி ஆகிய நாட்களிலும், இயக்கப்படும். மறுமார்க்கத்தில் பிகானீரில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் அதாவது வருகிற 6-ந் தேதி, 13-ந் தேதி, 20-ந் தேதி, 27-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 3-ந் தேதிகளில் சிறப்பு ரெயில் மதுரைக்கு இயக்கப்படுகிறது.
இதில் மதுரையில் இருந்து (வ.எண்.06053) வியாழக்கிழமைகளில் மதியம் 11.55 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை மதியம் 2.50 மணிக்கு பிகானீர் ரெயில் நிலையம் சென்றடையும். மறுமார்க்கத்தில் பிகானீரில் இருந்த(வ.எண்.06054) ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு மதுரை வந்தடையும்.
இந்த ரெயில்கள் கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், சூலூர் பேட்டை, கூடூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, கம்மம், வாரங்கல், ராமகுண்டம், சிர்புர்ககாங்கர், பல்ஹர்ஷா, சந்திராபூர், நாக்பூர், இட்டார்சி, போபால், சேஹோர் ஸுசால்பூர், உஜ்ஜைன், நாக்டா, கோட்டா, சவைமாதாபூர், துர்காபுரா, ஜெய்ப்பூர், புலேரா, மக்ரானா, டெகானா, நாகார், நோஹா ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
Related Tags :
Next Story