ஜெயங்கொண்டம் நகராட்சியில் சம்பள உயர்வு கேட்டு தூய்மைப் பணியாளர்கள் தர்ணா


ஜெயங்கொண்டம் நகராட்சியில் சம்பள உயர்வு கேட்டு தூய்மைப் பணியாளர்கள் தர்ணா
x
தினத்தந்தி 2 Dec 2020 11:32 PM GMT (Updated: 2 Dec 2020 11:32 PM GMT)

ஜெயங்கொண்டம் நகராட்சியில் சம்பள உயர்வு கேட்டுதூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் 20 பேரும், ஒப்பந்த பணியாளர்கள் 124 பேரும், டெங்கு தூய்மை பணியாளர்கள் 44 பேரும் தூய்மை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களில் ஒப்பந்த பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் 168 பேருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பாக நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் சம்பள உயர்வு வழங்குவதாக நகராட்சி நிர்வாகம் உறுதி அளித்திருந்தனர்.

ஆனால் இதுவரை சம்பள வழங்க வில்லை.

தர்ணா போராட்டம்

இதனையடுத்து நேற்று அவர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி ஆணையர் சுபாஷினி தூய்மை பணியாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையில் முறையான ஊதியம் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததன் பேரில். போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

Next Story