காஞ்சீபுரத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி
காஞ்சீபுரத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி தொடங்கின.
காஞ்சீபுரம்,
சட்டமன்ற தேர்தல் 2021 முன்னேற்பாடுகள் தொடர்பாக காஞ்சீபுரம் ராஜாஜி மார்கெட் பின்புறம் உள்ள காஞ்சீபுரம் மாவட்ட சேமிப்பு கிடங்கில் தேர்தலில் பயன்படுத்தப்பட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணியை அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சி நிர்வாகிகளின் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட கலெக்டருமான மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ரவிச்சந்திரன், தனி தாசில்தார் ரபிக், காஞ்சீபுரம் தாசில்தார் பவானி, காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர் ஆர்.மகேஸ்வரி, தேர்தல் துணை தாசில்தார் ஜெயவேல் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story