கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்தக்கோரி உண்ணாவிரதம்
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்தக்கோரி உண்ணாவிரதம் 29 பேர் கைது.
கரூர்,
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்தக்கோரி கோவிலின் முன்பு கரூர் மாவட்ட வீரத்தமிழர் முன்னணி - நாம் தமிழர் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் நன்மாறன் தலைமை தாங்கினார். அப்போது உண்ணாவிரதத்தை கைவிடக்கோரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்களை போலீசார் கைது செய்து போலீஸ் வேனில் அழைத்து சென்றனர். இதில் 4 பெண்கள் உள்பட 29 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Tags :
Next Story