சபரிமலைக்கு செல்ல அதிக கட்டுப்பாடுகள்: ரெகுநாதபுரம் அய்யப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டி வரும் பக்தர்கள்


ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டி வந்த பக்தர்களை படத்தில் காணலாம்
x
ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டி வந்த பக்தர்களை படத்தில் காணலாம்
தினத்தந்தி 3 Dec 2020 6:47 AM IST (Updated: 3 Dec 2020 6:47 AM IST)
t-max-icont-min-icon

சபரிமலைக்கு செல்ல அதிக கட்டுப்பாடுகள் உள்ளதால் ரெகுநாதபுரம் அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் இருமுடி கட்டி வந்து காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

அய்யப்பன் கோவில்
ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் பகுதியில் சபரிமலை அய்யப்பன் கோவில் தோற்றத்தில் ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த அய்யப்ப பக்தர்களும் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டி வந்து காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கே.கே.குப்பம், கண்டிகை பகுதியை சேர்ந்த 13 அய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டி சபரி மலை யாத்திரையாக ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரத்தில் உள்ள வல்லபை அய்யப்பன் கோவிலுக்கு வந்தனர்.

நெய் அபிஷேகம்
அவர்களை அய்யப்பன்கோவில் தலைமை குருசாமி மோகன் வரவேற்று ஆலயத்திற்கு அழைத்துச் சென்று அய்யப்பசாமிக்கு நெய் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்தார். இந்த பூஜையில் அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் அய்யப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அய்யப்ப பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

Next Story