குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை கண்டறிந்து தீர்வு காண வேண்டும் கலெக்டர் சாந்தா பேச்சு


குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை கண்டறிந்து தீர்வு காண வேண்டும் கலெக்டர் சாந்தா பேச்சு
x
தினத்தந்தி 3 Dec 2020 8:01 AM IST (Updated: 3 Dec 2020 8:01 AM IST)
t-max-icont-min-icon

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை கண்டறிந்து உடனடியாக தீர்வு காண வேண்டும் என கலெக்டர் சாந்தா கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகள் நல காவல் அலுவலர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் தொடர்பான திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நேற்று நடந்தது. பயிற்சி முகாமினை மாவட்ட கலெக்டர் சாந்தா தொடங்கி வைத்து துண்டு பிரசுரங்களை வெளியிட்டார். அதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை பெற்று கொண்டார். இதில் சட்டப்பணிகள் ஆலோசனைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான சரண்யா முன்னிலை வகித்தார்.

பின்னர் கலெக்டர் சாந்தா கூறியதாவது:-

குழந்தைகளுக்கு எதிராக பதிவு செய்யப்படும் 10 குற்றங்களில் 8 குற்றங்கள் குழந்தை கடத்தல் மற்றும் பாலியல் தொந்தரவு குற்றங்களாக உள்ளது. பாலியல் தொந்தரவு குற்றங்களில் அதிகமாக குழந்தைகளுக்கு நன்கு தெரிந்தவர்களால் இழைக்கப்படுகிறது. குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.

தீர்வு காண வேண்டும்

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை கண்டறிந்து உடனடியாக தீர்வு காண வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பினை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) முத்தமிழ் செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story