வேல் யாத்திரை நிறைவு விழா குறித்து பா.ஜ.க. ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்


பா.ஜ.க. மாநில வர்த்தக அணி துணைத்தலைவர் எஸ்.தணிகைவேல் பங்கேற்பு
x
பா.ஜ.க. மாநில வர்த்தக அணி துணைத்தலைவர் எஸ்.தணிகைவேல் பங்கேற்பு
தினத்தந்தி 3 Dec 2020 5:42 AM GMT (Updated: 3 Dec 2020 5:42 AM GMT)

பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் கடந்த மாதம் 6-ந்தேதி திருத்தணியில் வேல் யாத்திரையைத் தொடங்கினார். இந்த யாத்திரை 7-ந்தேதி திருச்செந்தூரில் நிறைவடைகிறது. விழாவில் மத்திய மந்திரிகள், மாநில முதல்-மந்திரிகள் மற்றும் கட்சியின் தேசிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

விழாவில் திரளாக பா.ஜ.க.வினர் பங்கேற்குமாறு மாநில தலைவர் எல்.முருகனும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.எனவே வேல் யாத்திரை நிறைவு விழாவில் திரளாக தொண்டர்கள் பங்கேற்பது குறித்து தண்டராம்பட்டு கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நேற்று தண்டாம்பட்டில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்தது. ஒன்றிய தலைவர்கள் தயாநிதி, ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பா.ஜ..க. வர்த்தக அணி மாநில துணைத் தலைவர் எஸ்.தணிகைவேல் பங்கேற்று வேல் யாத்திரை நிறைவு விழாவில் திரளான தொண்டர்கள் கலந்து கொள்வது குறித்து ஆலோசனையை வழங்கினார். மேலும் சட்டமன்ற தேர்தலில் பூத் கமிட்டி நிர்வாகிகளை அமைப்பது குறித்தும் ஆலோசனை வழங்கி பேசினார்.

கூட்டத்தில் பேராயம்பட்டு, வாணாபுரம், வரகூர், தென்கரும்பலூர் சேர்ப்பாப்பட்டு, சதாகுப்பம் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 120 இளைஞர்கள் பல்வேறு மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி எஸ்.தணிகைவேல் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் அருணைஆனந்தன், தொழிற்பிரிவு மாவட்ட செயலாளர் நடராஜ், இளைஞரணி நிர்வாகிகள் அஜித்குமார், மூவேந்தன், மாவட்ட நிர்வாகிகள் ராஜாங்கம்தேவர், குணசீலன், முருகன்காந்தி, சுரேஷ், வர்த்தக அணி செந்தில்குமார், செய்தி தொடர்பாளர் பி.ஆர். ஆனந்த், கமல், ரஜினி, நேதாஜி, எஸ்.சி. பிரிவு மாவட்ட செயலாளர் விஜயராஜ், ஐ.டி. பிரிவு தரணிகுமார் மற்றும் தண்டராம்பட்டு ஒன்றிய நிர்வாகிகள் தசரதன், முரளி, சிவக்குமார், பிரிதிவிராஜ், ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் ஒன்றிய தலைவர் வடிவேல் நன்றி கூறினார்.

Next Story