திருவண்ணாமலை மாவட்டத்தில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ பிரசார பயணம்; தி.மு.க. துணைபொது செயலாளர் பொன்முடி பங்கேற்கிறார்
திருவண்ணாமலை மாவட்டத்தில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ பிரசார பயணம் 5 நாட்கள் நடக்கிறது. இதில் தி.மு.க. துணைபொதுச்செயலாளர் க.பொன்முடி கலந்துகொள்கிறார்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிரசார பயணம்
விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற முழகத்தின் அடிப்படையில் வருகிற 5, 6, 7, 8 மற்றும் 10 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், ஆரணி மற்றும் செய்யாறு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள், மகளிர், மாணவர்கள் என பலதரப்பட்ட பிரிவினரை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. நிகழ்ச்சிகளில் துணைப் பொதுசெயலாளர் க.பொன்முடி எம்.எல்.ஏ கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
5-ந் தேதி திருவண்ணாமலை, 6-ந் தேதி கீழ்பென்னாத்தூர், 7-ந் தேதி செங்கம், 8-ந் தேதி ஆரணி, 10-ந் தேதி செய்யாறு ஆகிய சட்ட மன்ற தொகுதிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்
நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட செயலாளர் எ.வ.வேலு எம்.எல்.ஏ தலைமை வகிக்கிறார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் வேணுகோபால், சி.என்.அண்ணாதுரை எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர்
ரா.ஸ்ரீதரன், மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி உள்பட பலர் பங்கேற்கின்றனர்.
இதேபோல் கீழ்பென்னாத்தூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ.வும், செங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மு.பெ.கிரி எம்.எல்.ஏ.வும் பங்கேற்கின்றனர். ஆரணி மற்றும் செய்யாறில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தரணிவேந்தன் தலைமை வகிக்கிறார். நிகழ்ச்சிகள் அனைத்தும் சமூக இடைவெளியை பின்பற்றி நடைபெறவுள்ளது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story