மின்சாரம் தாக்கி ஓட்டல் தொழிலாளி சாவு திருத்துறைப்பூண்டியில் பரிதாபம்


மின்சாரம் தாக்கி ஓட்டல் தொழிலாளி சாவு திருத்துறைப்பூண்டியில் பரிதாபம்
x
தினத்தந்தி 4 Dec 2020 7:13 AM IST (Updated: 4 Dec 2020 7:13 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டியில் மின்சாரம் தாக்கி ஓட்டல் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடி- கீரகளூர் சாலை பகுதியை சேர்ந்தவர் உலகநாதன். இவருடைய மகன் சகாயராஜ் (வயது26). இவர் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று காலை இவர் ஓட்டலில் இட்லிக்கு மாவு அரைப்பதற்காக கிரைண்டரை இயக்கினார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட சகாயராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இதை அறிந்த திருத்துறைப்பூண்டி போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி, இன்ஸ்பெக்டர் மகாதேவன், சப்-இன்ஸ்பெக்டர் தேவதாஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story