வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Dec 2020 1:49 AM GMT (Updated: 4 Dec 2020 1:49 AM GMT)

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு இடங்களில் விவசாயிகள் சங்கங்கள், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் ரகுராமன், ஒன்றிய செயலாளர் காரல் மார்க்ஸ், முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜோதிபாசு, முருகானந்தம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், சாமிநாதன், பாண்டியன், ஜோதிபாசு, ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொட்டும் மழையில்...

புதிய வேளாண் சட்டங்கள் பதுக்கலுக்கு வழி வகுக்கும் என்பதால் அந்த சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின்போது அங்கு மழை பெய்தது.

ஆனாலும் கட்சியினர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story