நன்னிலம் அருகே புத்தாற்றின் குறுக்கே ரூ.3 கோடியில் புதிய பாலங்கள் அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்


நன்னிலம் அருகே புத்தாற்றின் குறுக்கே ரூ.3 கோடியில் புதிய பாலங்கள் அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 4 Dec 2020 7:22 AM IST (Updated: 4 Dec 2020 7:22 AM IST)
t-max-icont-min-icon

நன்னிலம் அருகே புத்தாற்றின் குறுக்கே ரூ.3 கோடியில் கட்டப்பட்ட புதிய பாலங்களை அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்.

நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஆனைக்குப்பம் ஊராட்சி ராஜாக்களியிருப்பூர், மாப்பிள்ளைகுப்பம் ஆகிய கிராமங்களை இணைக்கும் வகையில் புத்தாற்றின் குறுக்கே ரூ.1 கோடியே 47 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பிலும், வீதிவிடங்கன் ஊராட்சி பூங்குளம், திருவாஞ்சியம் ஆகிய கிராமங்களை இணைக்கும் வகையில் புத்தாற்றின் குறுக்கே ரூ.1 கோடியே 47 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பிலும் புதிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்த புதிய பாலங்களை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேற்று திறந்து வைத்தார். அப்போது மாவட்ட கலெக்டர் சாந்தா உடன் இருந்தார்.

பாலம் திறப்பு விழாவில் அமைச்சர் காமராஜ் பேசியதாவது:-

ஆலோசனைகள்

திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகள் செம்மையாக நடைபெறுகிற வகையில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றுகிற வகையில் புதிய பாலங்கள் கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது.

நன்னிலம் தூத்துக்குடி பகுதியில் ரூ.3 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில் அமைய உள்ள தாசில்தார் அலுவலம் மற்றும் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் அமைய உள்ள தாசில்தார் முகாம் அலுவலகம் ஆகியவற்றுக்கான இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் அச்சுதமங்கலம் ஊராட்சி திருப்பணி பேட்டையில் பகுதி நேர அங்காடியும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கோரிக்கைகள்

மக்களின் கோரிக்கைகளையும், தேவைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றி தருகிற முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் முன்னாள் எம்.பி. கோபால், கூடுதல் கலெக்டர் கமல்கிஷோர், திருவாரூர் உதவி கலெக்டர் பாலச்சந்திரன், ஒன்றியக்குழு தலைவர் விஜயலட்சுமி குணசேகரன், ஒன்றிய செயலாளர் ராம.குணசேகரன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் அன்பழகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பன்னீர்செல்வம், முன்னாள் பேரூராட்சி தலைவர் சுவாதி கோபால், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் சம்பத், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கனகசபை, ராமநாதன், கூட்டுறவு சங்க தலைவர்கள் பக்கிரிசாமி, மனோகரன், ஒன்றிய தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சாகேஸ்வரன், வீதிவிடங்கன் கிளை தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சுரேஷ், ஊராட்சி மன்ற தலைவர் சக்தி, ஒன்றிய ஆணையர்கள் விஸ்வநாதன், பொற்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருவாரூரில் ஆய்வு

திருவாரூர் புதுத்தெரு, மஜ்ஸித்தெரு ஆகிய பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீர் வெளியேற்றும் பணி நகராட்சி மூலம் நடைபெற்றது. இந்த பணியினை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட கலெக்டர் சாந்தா, உதவி கலெக்டர் பாலசந்திரன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) முத்துக்குமரன், தாசில்தார் நக்கிரன், கூட்டுறவு வங்கி தலைவர்கள் மூர்த்தி, கலியபெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story