தென்னை விவசாயிகள் காப்பீடு செய்யலாம் தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அறிவிப்பு
தென்னை விவசாயிகள் காப்பீடு செய்யலாம் என்று தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் தென்னை மரங்களை புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல், தீ விபத்து, நில அதிர்வு, ஆழிப்பேரலை ஆகியவற்றில் இருந்து பாதுகாக்க தங்களது தென்னை மரங்களை காப்பீடு செய்து கொள்வது அவசியம். இயற்கை சீற்றங்களால் தென்னை மரங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டாலோ அல்லது முற்றிலும் பலன் கொடுக்காத நிலை ஏற்படும் பட்சத்திலோ இந்த திட்டத்தில் இழப்பீடு வழங்கப்படுகிறது. ஒரு எக்டேருக்கு 175 தென்னை மரங்கள் மட்டுமே காப்பீடு செய்ய முடியும்.
காப்பீடு பிரீமியத்தில் மானிய தொகையாக மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் 50 சதவீதமும் மற்றும் மாநில அரசு 25 சதவீதமும் ஏற்றுக்கொள்கிறது. மீதமுள்ள 25 சதவீத பிரீமிய தொகையை மட்டுமே விவசாயிகள் செலுத்தினால் போதுமானது. நன்கு பராமரிக்கப்படும் வளமான காய்கள் உள்ள தென்னை மரங்களை மட்டுமே வயதுக்கு ஏற்ப பிரீமியம் செலுத்த காப்பீடு செய்ய வேண்டும். 4 முதல் 15 வயது வரையிலான தென்னை மரத்துக்கு ரூ.900 இழப்பீடு வழங்கப்படும். இதற்காக மரம் ஒன்றிற்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமிய தொகை ரூ.2.25 வீதம்.
காப்பீடு செய்யலாம்
இதே போல 16 முதல் 60 வயது வரை உள்ள தென்னை மரத்துக்கு ரூ.1,750 இழப்பீடு வழங்கப்படும். மரம் ஒன்றுக்கு விவசாயிகள் ரூ.3.50 வீதம் பிரீமிய தொகை செலுத்த வேண்டும். காப்பீடு செய்ய விவசாயிகளின் முன்மொழிவு படிவம், ஆதார் அட்டை நகல், சிட்டா மற்றும் அடங்கல், புல எண் வரைபடம், காப்பீடு செய்யும் மரங்களில் வண்ணம் பூசி 1, 2, 3 என வரிசையாக இலக்கமிட்டு விவசாயியுடன் எடுத்த புகைப்படம், வேளாண்மை உதவி இயக்குனரின் தென்னை காப்பீடு திட்டத்திற்கான சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகிய ஆவணங்கள் தேவை.எனவே தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி முன்மொழிவு படிவத்தை பெற்று நிறைவுசெய்து பிரீமியத்தை “ Agriculture Insurance Company of India Limited ” “payable at chennai ” என்ற முகவரிக்கு வரைவோலையாக எடுத்து மேற்கண்ட ஆவணங்களுடன் இணைத்து காப்பீடு நிறுவனத்துக்கு அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு காப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story