மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி; 2 பேர் படுகாயம்
மதுரை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
மோட்டார் சைக்கிள்கள்
மதுரை அருகே உள்ள ஆனையூர் பகுதியை சேர்ந்தவர் விவேக்ராஜா(வயது 24). தனியார் நிறுவன ஊழியர். இவரது அண்ணன் மோகன்ராஜ்(26). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பாசிங்காபுரம் வழியாக பாலமேடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே வழியில், கரிசல்குளம் பகுதியை சேர்ந்த ஆசிரியர் சேவியர்(50) பூதக்குடியில் உள்ள பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
இந்நிலையில் மதுரை- அலங்காநல்லூர் சாலையில் வந்தபோது விவேக் ராஜா, சேவியர் ஆகியோரது மோட்டார் சைக்கிள்கள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விசாரணை
அங்கு சிகிச்சை பலனின்றி விவேக்ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். மோகன்ராஜூம், சேவியரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story