தொடர் மழையால் மயிலாடுதுறை தாலுகாவில் 80 வீடுகள் இடிந்தன; 3 மாடுகள்-2 ஆடுகள் சாவு


தொடர் மழையால் மயிலாடுதுறை தாலுகாவில் 80 வீடுகள் இடிந்தன; 3 மாடுகள்-2 ஆடுகள் சாவு
x
தினத்தந்தி 5 Dec 2020 4:42 AM IST (Updated: 5 Dec 2020 4:42 AM IST)
t-max-icont-min-icon

தொடர் மழையால் மயிலாடுதுறை தாலுகாவில் 80 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மேலும் 3 மாடுகள்-2 ஆடுகள் உயிரிழந்துள்ளன.

80 வீடுகள் இடிந்தன
மயிலாடுதுறை பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வாய்க்கால்கள் மற்றும் ஆறுகளில் மழைநீர் நிரம்பி செல்கின்றன. ஒரு சில இடங்களில் வாய்க்கால் மற்றும் ஆறுகள் உடைப்பு எடுத்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ளன. இதனால் மயிலாடுதுறை தாலுகாவில் பல கிராமங்களில் வீடுகள் இடிந்து உள்ளன. மயிலாடுதுறை நகரின் கீழ நாஞ்சில் நாடு பகுதியில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. ஆனால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட அ.தி.மு..க. செயலாளர் செந்தில்நாதன், இடிந்து விழுந்த வீட்டை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அவருடன் நகராட்சி அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் இருந்தனர்.

3 மாடுகள் சாவு
இதேபோல மயிலாடுதுறை தாலுகாவில் தொடர்மழை காரணமாக 80 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மேலும் 3 மாடுகளும், 2 ஆடுகளும் உயிரிழந்துள்ளன என்று வருவாய்த் துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story