காரியாபட்டி அருகே தொடர்மழையால் வெங்காய பயிர்கள் சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.


காரியாபட்டி அருகே சொக்கனேந்தல் கிராமத்தில் பாதிக்கப்பட்ட வெங்காய பயிர்.
x
காரியாபட்டி அருகே சொக்கனேந்தல் கிராமத்தில் பாதிக்கப்பட்ட வெங்காய பயிர்.
தினத்தந்தி 5 Dec 2020 11:27 AM IST (Updated: 5 Dec 2020 11:27 AM IST)
t-max-icont-min-icon

காரியாபட்டி அருகே தொடர்மழையால் வெங்காய பயிர்கள் சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

தொடர்மழை
காரியாபட்டி அருகே சொக்கனேந்தல், சித்தனேந்தல், எஸ்.மறைக்குளம், பெரிய ஆலங்குளம், எஸ்.தோப்பூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் வெங்காயம் பயிரிட்டுள்ளனர்.

தற்போது வெங்காய பயிர்கள் வளர்ந்து விளைந்து மகசூல் தரும் நிலையில் உள்ளது. இந்தநிலையில் இந்த பகுதியில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் வெங்காய பயிர்கள் அழுகியும், திருகல் நோய் தாக்கியும் சேதமடைந்து வருகிறது.

வெங்காய பயிர்கள் சேதம்

இதுகுறித்து சொக்கனேந்தல் கிராமத்தை சேர்ந்த விவசாயி முத்தையா கூறியதாவது:-

எங்களது பகுதியில் ஆண்டுதோறும் வெங்காயத்தை பயிரிட்டு வருகிறோம். ஆனால் இந்த ஆண்டு இந்த பகுதியில் பெய்த தொடர்மழையினால் வெங்காயம் பயிர்கள் அழுகி சேதமாகி விட்டது. மேலும் திருகல் நோயினால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளோம். நடவு, உரம், மருந்து என ஒரு ஏக்கர் வெங்காயம் சாகுபடி செய்ய குறைந்தது ரூ.50 ஆயிரம் வரை செலவு ஆகிறது.

நிவாரணம்
நான் 4 ஏக்கர் வெங்காயம் பயிரிட்டுள்ளேன். இதில் நான் சாகுபடி செய்துள்ள வெங்காய பயிர்கள் முற்றிலும் அழுகிய நிலையில் பாதிப்படைந்துவிட்டது. இதனால் ரூ.2 லட்சம் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

எங்களது பகுதிக்கு வெங்காய பயிர்களுக்கு காப்பீடு செய்ய முடியவில்லை. காப்பீடு செய்தாவது இழப்பை சரி செய்து கொள்ளலாம் என்றாலும் அதற்கும் வழியில்லை. எனவே சேதமடைந்த விவசாயிகளை காப்பாற்ற அரசு போதுமான நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story