காஞ்சீபுரம் அருகே மின்சாரம் தாக்கி மின் வாரிய ஊழியர்கள் 2 பேர் சாவு


காஞ்சீபுரம் அருகே மின்சாரம் தாக்கி மின் வாரிய ஊழியர்கள் 2 பேர் சாவு
x
தினத்தந்தி 6 Dec 2020 4:30 AM IST (Updated: 5 Dec 2020 11:45 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே மின்சாரம் தாக்கி மின் வாரிய ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரத்தை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் மின்சார வயர் அறுந்து கிடப்பதாக காஞ்சீபுரத்தில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி காஞ்சீபுரம் மின் வாரிய அலுவலகத்தில் திம்மசமுத்திரத்தை சேர்ந்த பாக்கியநாதன் (வயது 42), ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த தயாளன் (44) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்திற்கு மின்சார வயரை சரி செய்ய சென்றனர்.

அங்கு எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மின்சாரம் தாக்கியது.

இதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த பாக்கியநாதனுக்கு சித்ரா என்ற மனைவியும், பிரியங்கா, திவ்யகலா என்ற 2 மகள்களும் உள்ளனர். உயிரிழந்த தயாளனுக்கு தீபா என்ற மனைவியும், பவித்ரா, சங்கீதா என்ற 2 மகள் களும் உள்ளனர். இது குறித்து உயிரிழந்த பாக்கியநாதனுடைய அண்ணன் லோகநாதன் காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலை மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மைனர்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று உயிரிழந்த பாக்கியநாதன், தயாளன் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த 2 பேரின் உடலை பார்த்து அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

Next Story