தொழுதூர் அணைக்கட்டு திறப்பு: வெள்ளாற்றில் கரை புரண்டு ஓடும் தண்ணீர் விவசாயிகள் மகிழ்ச்சி
‘புரெவி’ புயலால் சேலம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் தொழுதூர் அணைக்கட்டில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால், அணையில் இருந்து வெள்ளாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மங்களமேடு,
‘புரெவி’ புயலால் சேலம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் தொழுதூர் அணைக்கட்டில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால், அணையில் இருந்து வெள்ளாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் வெள்ளாற்றின் தென்கரையில் உள்ள திருவாலந்துறையில் இருந்து வசிஷ்டபுரம் ஊராட்சி வரை சுமார் 10 கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொழுதூர் அணைக்கட்டில் இருந்து வரும் வெள்ளாற்று நீரால் வடக்கலூர் ஏரி, கீழப்பெரம்பலூர் ஏரி உள்பட சின்னதும், பெரியதுமாக சுமார் 30-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி உள்ளன. மேலும் வெள்ளாற்றில் கீழ குடிக்காடு மற்றும் அகரம்சிகூர் அருகே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் நிறைந்து வழிகின்றன. வெள்ளாற்றின் துணை ஆறான சின்னாற்றின் இருகரையையும் தொண்டு புரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்கள் தண்ணீர் பிரச்சினை இந்த வருடம் வராது என்று கூறி, மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
Related Tags :
Next Story