டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக புதுக்கோட்டையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் வட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை,
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் வட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்திலும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி புதுக்கோட்டையில் திலகர் திடலில் தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான ரகுபதி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பெரியண்ணன் அரசு, மெய்யநாதன் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும் பலர் கருப்பு சட்டை அணிந்து வந்து கருப்பு கொடியை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து வருகிற 8-ந் தேதி நடைபெற உள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story