‘புரெவி’ புயலால் பலத்த மழை: 900 ஏக்கர் சம்பா நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி நாசம் விவசாயிகள் கண்ணீர்
‘புரெவி’ புயல் மழை காரணமாக சுமார் 900 ஏக்கர் சம்பா நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி நாசமடைந்தன.
கல்லக்குடி,
‘புரெவி’ புயல், மழை காரணமாக திருவெறும்பூர் பகுதிக்கு உட்பட்ட அரசங்குடியில் 50 ஏக்கர், கிளியூரில் 100 ஏக்கர், பத்தாளப்பேட்டையில் 50 ஏக்கர், செட்டியார் பேட்டையில் 50 ஏக்கர், திருநெடுங்குளத்தில் 360 ஏக்கர், தேவராயநேரியில் 50 ஏக்கர் என இப்பகுதியில் சுமார் 800 ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. மழைநீர் வடிவதற்கு போதிய வடிகால் இல்லாதது விவசாயிகளுக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது.
ஏரிபோல் காட்சி
புள்ளம்பாடி ஒன்றியம் விரகாலூரில் உள்ள 114 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி மூலம் சுமார் 100 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இங்கு கடைமடைப் பகுதியில் விவசாயம் செய்யும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் வரப்புகளை உயர்த்தி பாலம் போல் அமைத்துள்ளதால் இந்த விளை நிலங்களில் மழைநீர் வடிய வழியில்லை.
இதனால் கடந்த 3 நாட்களாக புரெவி புயலால் பெய்து வரும் மழையால் விளைநிலங்கள் முழுவதும் நீரில் மூழ்கி ஏரி போல் காட்சி அளிக்கிறது.
எனவே இதில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி, அழுகி போய் நாசமாகி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் விளைநிலங்களில் தேங்கியுள்ள மழைநீரை வடியச் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story