வேளாண் சட்டங்களை எதிர்த்து மோடி உருவபொம்மையை எரித்து போராட்டம்


வேளாண் சட்டங்களை எதிர்த்து மோடி உருவபொம்மையை எரித்து போராட்டம்
x
தினத்தந்தி 6 Dec 2020 7:46 AM IST (Updated: 6 Dec 2020 7:46 AM IST)
t-max-icont-min-icon

வோளண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அண்ணாசிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று போராட்டம் நடந்தது.

திருத்துறைப்பூண்டி,

வோளண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அண்ணாசிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ரகுராமன், ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், சாமிநாதன், பாண்டியன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தங்கராசு, வேதையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது மோடியின் உருவ பொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் அருகே கூடூரில் காட்டாற்று பாலம் பகுதியில் நடந்த சாலை மறியல் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் இடும்பையன், விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் பவுன்ராஜ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சேகர், சி.ஜ.டி.யூ. மாவட்ட தலைவர் மாலதி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story