டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாகையில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நாகை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருப்புக்கொடி ஏந்தி நாகை அவுரித்திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகப்பட்டினம்,
மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நாகை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருப்புக்கொடி ஏந்தி நாகை அவுரித்திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் போலீஸ் பன்னீர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மதிவாணன் எம்.எல்.ஏ, செயற்குழு உறுப்பினர்கள் மேகநாதன், கோவிந்தராசு, ராஜேந்திரன், செந்தில்குமார் மற்றும் தி.மு.க.வினர் கொட்டும் மழையில் குடைபிடித்து கொண்டு கலந்து கொண்டனர்.
விவசாயிகளை வஞ்சிக்கும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய மத்திய அரசை கண்டிப்பது. விவசாயிகளின் உற்பத்தி செலவுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Tags :
Next Story