தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழையால் 23 ஆயிரம் ஏக்கரில் நெல், நிலக்கடலை பயிர்கள் நீரில் மூழ்கின
தஞ்சை மாவட்டத்தில் தொடர்மழையால் 23 ஆயிரம் ஏக்கரில் நெல், நிலக்கடலை பயிர்கள் நீரில் மூழ்கின என்று கண்காணிப்பு அலுவலர் சுப்பையன் கூறினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் புரெவி புயல் காரணமாக கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளனர். பல்வேறு பகுதிகளில் தொடர் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தஞ்சை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்பையன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தஞ்சை அருகே சக்கரசாமந்தம் கிராமத்தில் இளம் நெற்பயிர்கள் மூழ்கி இருப்பதை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவுடன் பார்வையிட்ட சுப்பையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் 15 செ.மீ. அளவுக்கு மழை பெய்தது. ஏற்கெனவே மழை பெய்த நிலையில், இரு நாட்களில் 15 செ.மீ. மழை பெய்ததால், 23 ஆயிரத்து 500 ஏக்கரில் நெல், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் மூழ்கியுள்ளன. இந்த நிலைமை தொடர்ந்து இருந்து வருகிறது. இதுதொடர்பாக தொடர்ந்து கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.
வடிய வைக்கும் பணி
மேலும், எத்தனை நாள்கள் மூழ்கியிருக்கிறது என்பதை பார்த்து எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பது முடிவு செய்யப்படும். இதன் அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும். இதனிடையே, எங்கெங்கு தண்ணீர் தேங்கியிருக்கிறதோ, அங்கெல்லாம் வடிய வைப்பதற்கான பணிகளில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.நெற் பயிரைப் பொறுத்தவரை இயன்ற அளவுக்குத் தேங்கிய நீரை வடிய வைக்க வேண்டும். 2 அல்லது 3 நாள்களில் மழை நின்றுவிட்டால், தண்ணீர் வடிந்து மீண்டும் பயிர்கள் நன்றாகிவிடும். இளம் பயிர்களைக் காப்பாற்ற வாய்ப்பு இருக்கிறது. அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ள ஏறத்தாழ 4 ஆயிரத்து 250 ஏக்கரில் உள்ள பயிர்கள் மடங்கி தண்ணீரில் மூழ்கியிருப்பதால், இவை எல்லாம் மீண்டும் முளைக்க வாய்ப்புள்ளது. இதற்கான நிவாரணம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
பயிர் காப்பீடு
தஞ்சை மாவட்டத்தில் 3 லட்சத்து 37 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதில், ஏறத்தாழ 2½ லட்சம் ஏக்கருக்கு பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. வருகிற 15-ந் தேதி வரை கால அவகாசம் இருப்பதால், அதற்குள் மீதமுள்ள விவசாயிகளும் காப்பீடு செய்து கொள்ளலாம். குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிய தண்ணீரை வடிய வைத்து, மீண்டும் தேங்காத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் சாய்ந்த 7 மின் கம்பங்கள் சீர் செய்யப்பட்டதால் மின் வினியோகத்தில் பிரச்னை இல்லை. மாவட்டத்தில் 694 வீடுகள் பகுதியாகவும், முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. இவை தொடர்பாக கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story