டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையில் தி.மு.க.வினர் கொட்டும் மழையில் குடைபிடித்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி நேற்று தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., வர்த்தக அணி தலைவர் உபயதுல்லா, எம்.எல்.ஏ.க்கள் நீலமேகம், ராமச்சந்திரன், மாநில விவசாய அணி துணை செயலாளர் ஜித்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோஷங்கள் எழுப்பினர்
ஆர்ப்பாட்டத்தின் போது மழை பெய்ததால் கொட்டும் மழையில் குடைபிடித்துக்கொண்டு தி.மு.க.வினர் பங்கேற்றனர். மேலும் கருப்புக்கொடி ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு அதரவுதெரிவித்தும், 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம், சட்ட திருத்தக்குழு உறுப்பினர் இறைவன், முன்னாள் எம்.எல்.ஏ. மகேஷ்கிருஷ்ணசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்.ராமநாதன், ஒன்றிய செயலாளர்கள் அருளானந்தசாமி, உலகநாதன், முரசொலி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி உஷா, ஒன்றியக்குழு தலைவி வைஜெயந்திமாலா, மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story