நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
நாகப்பட்டினம்,
மன்னார்வளைகுடா பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிப்பதால் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விளைநிலங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி உள்ளன. பல இடங்களில் விவசாயிகள் வயல்களில் தேங்கிய மழைநீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்தநிலையில் தமிழக சட்ட மன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்றுமுன்தினம் திருவாரூர் மாவட்டத்துக்கு வந்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். நேற்று காலை மீண்டும் திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அவர் காவணூர் பகுதிக்கு சென்று அங்கு மழையால் பாதிக்கப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தங்கி இருந்த மக்களை சந்தித்து அவர்களுக்கு அரிசி, காய்கறி, போர்வை, பாய் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். பின்னர் தாழைக்குடி மற்றும் திருமதிகுன்னம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார்.
மன்னார்குடி
தொடர்ந்து மன்னார்குடி ஒன்றியம் கருப்பூர் மற்றும் கீழமணலியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து, நிவாரண பொருட்களை வழங்கினார். அங்கிருந்து மாங்குடி வழியாக கச்சனம் சென்ற மு.க.ஸ்டாலின் அங்கு மழையால் பாதிக்கப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் தங்கி இருந்த மக்களை சந்தித்து அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது அவர் மழை பாதிப்பு குறித்து விவரங்களை மக்களிடம் கேட்டறிந்தார். திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 6 இடங்களில் 1,200 பேருக்கு நிவாரண பொருட்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அப்போது அவருடன் தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ.க்கள் பூண்டி.கலைவாணன், டி.ஆர்.பி.ராஜா, ஆடலரசன், மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, முன்னாள் எம்.பி. விஜயன், ஒன்றிய செயலாளர்கள் பாலச்சந்தர், கலியபெருமாள், தேவா, பிரகாஷ், நகர செயலாளர் வாரைபிரகாஷ், விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளர் சங்கர், முன்னாள் நகரசபை துணைத்தலைவர் செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.
திருக்குவளைக்கு சென்றார்
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட மு.க.ஸ்டாலின் நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள தனது தந்தை கருணாநிதி பிறந்த வீட்டுக்கு சென்றார். அங்கு முத்துவேலர், அஞ்சுகம், கருணாநிதி, முரசொலிமாறன் உள்ளிட்டோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்தார். பின்னர்
அவர் அங்குள்ள வருகை பதிவேட்டில், “அண்ணா வழியில் அயராது உழைத்து, கலைஞரின் ஆட்சியை உருவாக்க சபதமேற்போம்“ என குறிப்பிட்டு கையெழுத்திட்டார். இதைத்தொடர்ந்து மேலப்பிடாகைக்கு சென்ற மு.க.ஸ்டாலின், மழை வெள்ளம் சூழ்ந்த விளை நிலங்களை
பார்வையிட்டார்.
நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
அப்போது நீரில் மூழ்கிய நெற்பயிர்களை அவரிடம் கையில் எடுத்து காட்டிய விவசாயிகள், வடிகால் நீர் வழித்தடங்கள், நீர்நிலைகள் முறையாக தூர்வாரப்படாததால் பல இடங்களில் மழைநீர் தேங்கி பயிர்கள் மூழ்கியுள்ளது என கூறினர். இதை கேட்டறிந்த மு.க.ஸ்டாலின் அங்கு மழையால் பாதிக்கப்பட்ட மேலப்பிடாகை, மீனம்பநல்லூர் பகுதியை சேர்ந்த 200 பேருக்கு அரிசி, புடவை, போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். பின்னர் நாகை அருகே தெத்தி சுனாமி குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழ்ந்த பகுதிகளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு நாகூர் பகுதியில் கனமழையால் பாதிக்கபப்ட்ட 250 பேருக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் கவுதமன், மதிவாணன் எம்.எல்.ஏ., செல்வராஜ் எம்.பி., கீழையூர் ஒன்றிய செயலாளர் தாமஸ்ஆல்வாஎடிசன், வேளாங்கண்ணி பேரூர் கழக பொறுப்பாளர் மரியசார்லஸ், நாகூர் நகர செயலாளர் செந்தில் உள்பட கட்சியினர் இருந்தனர்.

Related Tags :
Next Story