தஞ்சையில் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சையில் பல்வேறு கட்சி, இயக்கங்கள் சார்பில் அம்பேத்கர் நினைவு நாள் மற்றும் பாபர்மசூதி இடிப்பைகண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர்,
தஞ்சையில் பல்வேறு கட்சி, இயக்கங்கள் சார்பில் அம்பேத்கர் நினைவு நாள் மற்றும் பாபர்மசூதி இடிப்பைகண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒடுக்கப்பட்ட வாழ்வுரிமை இயக்க மாநில துணை தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார், மக்கள் அதிகாரம் பொருளாளர் காளியப்பன், தமிழ்தேச மக்கள் முன்னணியின் மாவட்ட செயலாளர் அருண்சோரி, மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநகர செயலாளர் ராவணன், ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட தலைவர் நாத்திகன் மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் சேவையா, மாவட்ட துணை செயலாளர் துரை மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆதித்தமிழர் பேரவை சார்பில் ரயிலடி முன்பு வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சட்ட மாமேதை அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும், சாதி மதம் களைந்த வர்க்க பேதமற்ற சோஷலிச சமூகத்தை படைக்க வேண்டும், பாபர் மசூதி இடித்த இடத்தில், ராமர் கோவில் கட்டுவதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Tags :
Next Story