பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் பிரதமர் உருவ படத்தை எரிக்க முயற்சி
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திருப்பூரில் முஸ்லிம் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிரதமர், உள்துறை மந்திரி உருவ படத்தை தீவைத்து எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ம் தேதியன்று அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை கண்டித்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ம் தேதி முஸ்லிம் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகின்றன. அந்த வகையில் நேற்று மதியம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு மாவட்ட தலைவர் நசீர் தீன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சுப்பராயன் எம்.பி., மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொது செயலாளர் தாம்பரம் யாகூப் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பாபர் மசூதி இடிப்பில் தொடர்புடையவர்களை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
உருவபொம்மை எரிக்க முயற்சி
மேலும், ஆர்ப்பாட்டத்தின்போது பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரஞ்சன் கோகாயின் உருவ பொம்மை மற்றும் உருவப்படத்தை எரிக்க முயன்றனர். இதேபோல் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் உருவப் படங்களையும் தீவைத்து எரிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, உருவபொம்மை, படங்களை கைப்பற்றினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி, த.மு.மு.க. நிர்வாகிகள் மற்றும் பெண்கள் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்
இதேபோல் திருப்பூர் குமரன் சிலை முன் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மாவட்ட தலைவர் பசீர்அகமது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் வடக்கு தொகுதி தலைவர் அப்துல் சத்தார் வரவேற்புரையாற்றினார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில துணை தலைவர் ஹாலித் முஹம்மது, திராவிடர் விடுதலைக்கழக மாவட்ட தலைவர் முகில் ராசு ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பாபர் மசூதி இடிப்பில் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்க கோரியும், பாபர் மசூதி நிலத்தை முஸ்லிம்களுக்கு திரும்ப வழங்க கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு தலைவர் இப்ராஹிம் கலீல், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் ஹாரிஸ் பாபு, பொருளாளர் ஜாபர் சாதிக், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் ஹபிபுர் ரகுமான், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில், குர்பானி அறக்கட்டளை, நேஷனல் விமன்ஸ் பிரண்ட் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
திருப்பூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்ற குமரன் சிலை, மாநகராட்சி அலுவலகம் ஆகிய பகுதிகளில் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் மேற்பார்வையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி அலுவலகம், குமரன் சிலை ஆகிய பகுதிகளில் தண்ணீரை பீய்ச்சி அடிக்கக்கூடிய வஜ்ரா வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

Related Tags :
Next Story