சூலூரில் ரூ.5¼ கோடியில் பஸ் நிலையம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்


சூலூரில் ரூ.5¼ கோடியில் பஸ் நிலையம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 7 Dec 2020 9:56 AM IST (Updated: 7 Dec 2020 9:56 AM IST)
t-max-icont-min-icon

சூலூரில் ரூ.5¼ கோடியில் கட்டப்பட்ட பஸ் நிலையத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

சூலூர்,

சூலூரில் ரூ.5 கோடியே 30 லட்சத்தில் கட்டப்பட்ட டாக்டர் புரட்சித்தலைவி அம்மா பஸ் நிலைய திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. எம்.எல்.ஏ. க்கள் சூலூர் வி.பி.கந்தசாமி, எட்டிமடை சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் மாதப்பூர் பாலு, ரத்தினம் கனகராஜ் ஆகியோர் வரவேற்றனர்.

இதில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு புதிய பஸ் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததுடன், பஸ்நிலைய கல்வெட்டையும் திறந்து வைத்தார். தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பொய்யான தகவல்

சூலூரில் தினமும் 39 ஆயிரம் பொதுமக்கள் பயன்பெறக்கூடிய வகையில் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா பஸ் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் குறிப்பாக சூலூர் சட்டமன்ற தொகுதியில் 50 ஆண்டுகளில் இல்லாதது 5 ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டப் பணிகள் செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் பல பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எப்போதும் குறை கூறி வருகிறார். அவர் உண்மையை மறைத்து பொய்யான, தகவல்களை பரப்பி வருகிறார். அது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெயர் சூட்டினார்

முன்னதாக ஒரு பெண் குழந்தைக்கு சபரிஸ்ரீ என அமைச்சர் பெயர் சூட்டினார். சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட இடையர்பாளையத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம், சூலூரில் உள்ள புதிய தெற்கு ஒன்றிய அலுவலகத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில், கலெக்டர் ராஜாமணி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் துவாரகநாத் சிங், பேரூராட்சி செயல் அலுவலர்கள் செந்தில்குமார், ராஜேந்திரன், ரவி, உதவியாளர் சாமிநாதன், அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அன்பு ஆபிரகாம், உதவி மேலாளர் (வணிகம்) வாசுதேவன், சூலூர் கிளை மேலாளர் சுரேந்திரன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் தோப்பு க.அசோகன், ஒன்றிய அவைத்தலைவர் லிங்கசாமி, ஒன்றிய செயலாளர்கள் வி.பி.கந்தவேல், ஜி.குமாரவேல், அப்புசாமி, ஒன்றிய துணை செயலாளர் கே.எம்.அங்கமுத்து, நகர செயலாளர்கள் வக்கீல் கார்த்திகை வேலன், எம்.கே.எம்ஆனந்தகுமார், வி.கே.சண்முகம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் குட்டியப்பன், என்.பெரியசாமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் தங்கராஜ், சூலூர் நகர துணை செயலாளர் ஏ.பி.அங்கண்ணன், இருகூர் தெற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் தண்டபாணி, இருகூர் நகர அவைத்தலைவர் பரமசிவம், சூலூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கலங்கல் நடராஜ், கலங்கல் ஊராட்சி தலைவர் ப.ரங்கநாதன், ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் சி.ஏ.ரமேஷ், ஒன்றிய பேரவை செயலாளர் கே.எஸ்.ஆர்.சந்திரசேகர், மாவட்ட மீனவர் அணி தலைவர் எஸ்.ஏ.ஆறுமுகம், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் எஸ்.பி.சிவகுமார், ஒன்றிய பாசறை செயலாளர் சூலூர் ஆர்.சிவகுமார், இடையர்பாளையம் ஊராட்சி தலைவர் சுப்புலட்சுமி, கோவை புறநகர் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் வக்கீல் பிரபுராம், சூலூர் வடக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பிரபு, ஒன்றிய அம்மா பேரவை இணை செயலாளர் கார்த்தி, ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் ராஜன், சூலூர் நகர அம்மா பேரவை செயலாளர் மோகன், சூலூர் அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story