விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Dec 2020 9:58 AM IST (Updated: 7 Dec 2020 9:58 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பந்தலூர்,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பந்தலூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு ஊட்டி எம்.எல்.ஏ. கணேஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கோஷி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story