பழனி உள்பட 3 இடங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பழனி உள்பட 3 இடங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Dec 2020 10:06 AM IST (Updated: 7 Dec 2020 10:06 AM IST)
t-max-icont-min-icon

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பழனி குளத்து ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பழனி,

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பழனி குளத்து ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழனி சட்டமன்ற தொகுதி தலைவர் அக்பர் அலி தலைமை தாங்கி னார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கைசர் அலி, பொதுச் செயலாளர் முபாரக் அலி, செயலாளர் சதாம் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது, பாபர் மசூதி நிலத்தை முஸ்லிம்களிடம் திருப்பி கொடுக்க வேண்டும், வழிபாட்டுத்தலங்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் நத்தம் பஸ் நிலைய ரவுண்டானா முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சியினர், சட்டமன்ற தொகுதி தலைவர் பதுருதீன் ஹஜ்ரத் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் தொகுதி செயலாளர் ஷாஜி அபுதாஹீர், பொருளாளர் சாதிக்அலி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திண்டுக்கல் பேகம்பூரில் சட்டமன்ற தொகுதி தலைவர் சையது இப்ராகிம்ஷா தலைமையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல் லத்தீப் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக அக்கட்சியினர் மக்கான் தெருவில் இருந்து பேகம்பூர் திப்புசுல்தான் திடலுக்கு ஊர்வலமாக சென்றனர்.

Next Story