மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்களை அதிகாரி பார்வையிட்டார்


மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்களை அதிகாரி பார்வையிட்டார்
x
தினத்தந்தி 8 Dec 2020 5:33 AM IST (Updated: 8 Dec 2020 5:33 AM IST)
t-max-icont-min-icon

தொடர் மழையின் காரணமாக இந்த பகுதியில் சுமார் 100 ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கி உள்ளன.

கல்லக்குடி,

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், விரகாலூர் கிராமத்தில் 114 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் விரகாலூர், ஆலம்பாடி மேட்டூர் கிராமங்களை சேர்ந்த 100 ஏக்கர் விவசாய விளைநிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. சமீபத்திய புரெவி புயல், மழையால் ஏரி முழு கொள்ளளவை அடைந்து விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும், தொடர் மழையின் காரணமாக இந்த பகுதியில் சுமார் 100 ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கி உள்ளன. இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரிகள் ஜெயராமச்சந்திரன்(ஆலம்பாடி மேட்டூர்), ஜெயசுகந்தி(விரகாலூர்) ஆகியோர் அதிகாரிகளுக்கு கொடுத்த தகவலின்பேரில், லால்குடி தாசில்தார் சித்ரா, நீரில் மூழ்கிய நெற்பயிர்களை பார்வையிட்டார். அப்போது அவர், மழை முடிந்த பிறகு பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கூறி வரத்து வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வாய்க்காலை தூர் வாரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் தெரிவித்தார். அப்போது புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சிவகுமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், பொதுப்பணித்துறை கள ஆய்வு உதவி அலுவலர் வடமலை, வருவாய் ஆய்வாளர் காஞ்சனா, புள்ளம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோஸ்பின் ஜெசிந்தா, விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் உடன் இருந்தனர்.

Next Story